நம் முன்னேற்றத்தை தடுக்கும் மனச்சோர்வு.

உங்களுக்குள் உடல் சோர்வா? மனச்சோர்வா?

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், பதின்பருவ இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அடிக்கடி சொல்லும் ஒரு பொதுவான வார்த்தை உண்டு; அது—"சலிப்பா இருக்கு" என்பதுதான்.

சலிப்பாக இருக்கிறது என்று சொல்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உற்று நோக்கினால், அவர்கள் மணிக்கணக்கில் மொபைல் போனையோ அல்லது டிவியையோ பார்த்துக் கொண்டு சோம்பலாக அமர்ந்திருப்பார்கள். 

ஆனால், அப்படித் திறக்கும் சமூக ஊடகப் பக்கங்களில் நமக்கு நிம்மதி கிடைக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. இப்போது சோசியல் மீடியாக்களில் அரசியலும் ஆபாசமும் தான் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய "மனம் தான் எல்லாம்" வலைப்பதிவின் உன்னதமான தத்துவம்—"மனதை கட்டுப்படுத்து, வாழ்வு சொர்க்கமாகும்" என்பதுதான். இந்த தத்துவத்தின் அடிப்படையில், இன்றைய டிஜிட்டல் உலக நச்சுத்தன்மை நம் உடலையும் மனதையும் எப்படிச் சீரழிக்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக ஆராய்வோம்.

உண்மையில் சோர்வு என்பது என்ன? (Physical Fatigue vs Mental Fatigue):

நம்மில் பலரும் சலிப்பையும் சோர்வையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்கிறோம். 

உண்மையில் உடல் சோர்வு என்பது, நீங்கள் சும்மா உட்கார்ந்து இருந்தாலே உங்களை அறியாமல் கண்கள் சொக்கி தூக்கம் வருவதுதான். 

இதுதான் உண்மையான உடல் சோர்வு. நாள் முழுவதும் உழைத்து, உடல் உறுப்புகள் ஓய்வைக் கேட்கும் போது இந்த நிலை ஏற்படும்.

ஆனால், "எனக்கு சோர்வாக இருக்கிறது" என்று கூறிக்கொண்டு, படுக்கையில் படுத்துக்கொண்டு மணிக்கணக்கில் போனை நோண்டுவதால் என்ன ஆகிறது தெரியுமா?

நீங்கள் படுக்கையில் படுத்திருந்தாலும், உங்கள் மூளைக்கு ஓய்வே இல்லாமல் போகிறது. 

உடல் செயலற்று இருந்தாலும், மூளை வினாடிக்கு வினாடி மாறும் போன் திரையின் காட்சிகளைப் பார்த்து தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறது. 

இதனால், மறுநாள் காலையில் எழும்போதே ஒருவித மந்தநிலை ஏற்பட்டு, செய்யும் வேலையில் பிடிப்பு இல்லாமல் போகும். வேலையைத் தன் பொறுப்புணர்ந்து செய்யாமல் ஏனோ தானோ என்று 'கடமைக்குச்' செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

இவர்களால் வேலையில் "ஸ்மார்ட் ஒர்க்" நிலையை அடையவே முடியாது.

"தூக்கம் வரலை, அதான் போன் பார்க்கிறேன்" - ஒரு நச்சு வட்டம்!

சிலர் தங்களின் இந்தத் தவறை நியாயப்படுத்த, "எனக்குத் தூக்கம் வரவில்லை, அதனால்தான் டைம்பாஸிற்கு போன் பார்க்கிறேன்" என்பார்கள். 

இங்கேதான் அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு பெரிய ஆரோக்கியப் பொறிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். 

தூக்கம் வரவில்லை என்று போன் பார்ப்பது, போன் பார்ப்பதால் தான் தூக்கம் வராமல் போவது என்பது ஒரு முடிவில்லாத ஆபத்தான நச்சு வட்டம் (Vicious Cycle) ஆகும்.

அறிவியல் ரீதியாக, ஸ்மார்ட்போன் திரைகளில் இருந்து வெளிவரும் "நீல ஒளி" (Blue Light), நம் உடலில் இயற்கையாகத் தூக்கத்தைத் தூண்டக்கூடிய "மெலடோனின்" (Melatonin) என்ற ஹார்மோன் சுரப்பதைத் தடுத்து விடுகிறது. 

நாம் நள்ளிரவில் போனைப் பார்க்கும்போது, அந்த வெளிச்சத்தைப் பார்க்கும் நம் மூளை, "இன்னும் பகல் பொழுதுதான் இருக்கிறது, விழிப்போடு இரு" என்று தவறாகப் புரிந்து கொள்கிறது. இதனால், இயற்கையாக வரவேண்டிய தூக்கம் இன்னும் பல மணிநேரம் தள்ளிப் போகிறது.

சமூக ஊடகங்களில் நிறையும் அரசியலும் ஆபாசமும்!:

சரி, தூக்கம் வராமல் நாம் பார்க்கும் சமூக ஊடகங்களில் என்னதான் இருக்கிறது? 

எங்குப் பார்த்தாலும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காத அரசியல் சண்டைகள், வன்மத்தை விதைக்கும் விவாதங்கள், அல்லது நாகரிக எல்லையைத் தாண்டிய ஆபாசக் உள்ளடக்கங்கள் (Vulgar Content) தான் நம் கண் முன்னால் வந்து நிற்கின்றன.

மனித மனம் என்பது ஒரு வளமான நிலம் போன்றது. அதில் நாம் எதைப் பார்க்கிறோமோ, அதுதான் எண்ணங்களாக வளரும். 

சமூக ஊடக நிறுவனங்களின் தொழில்நுட்ப விதி (Algorithm), மனிதர்களின் கோபம், பயம் மற்றும் அதீத ஆசை முக்கியமாக ஆபாசம் ஆகிய உணர்ச்சிகளைத் தூண்டும் பதிவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் திரையில் மீண்டும் மீண்டும் காட்டுகின்றன.

அரசியல் சண்டைகளும், கவர்ச்சியான பதிவுகளும் நம் மூளையில் 'டோபமைன்' (Dopamine) என்ற தற்காலிக மகிழ்ச்சி தரும் ஹார்மோனைத் தூண்டுகின்றன. 

இதனால், நம் மனதிற்கு அது கெடுதல் என்று தெரிந்தும், நம்மை அறியாமலேயே அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம். இறுதியில், அது நம்முடைய விலைமதிப்பற்ற நேரத்தையும், மன அமைதியையும் திருடி, தீவிர மனச்சோர்வுக்கு (Mental Boredom) வழிவகுக்கிறது.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு சுயபரிசோதனைக் கேள்வி!

இனிவரும் காலங்களில் உங்களுக்கு சோர்வு ஏற்படும் போது, உங்களை நீங்களே இந்த ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்:

"நான் இப்போது சும்மா உட்கார்ந்தால் தூங்குவேனா? அல்லது போனைத் தேடுவேனா?"

பதில் 1 - தூங்குவேன் என்றால்: அது உண்மையான உடல் சோர்வு. அதற்கு மருந்து போன் அல்ல, தூக்கம் மட்டுமே. விளக்கை அணைத்து விட்டு சும்மா படுத்திருந்தாலே 20 நிமிடத்தில் தூக்கம் தானாக வந்து விடும். தயவுசெய்து உடனே தூங்கிவிடுங்கள்.

பதில் 2 - போனைத் தேடுவேன் என்றால்: அது உடல் சோர்வு அல்ல; அது உங்கள் மனதிற்கு ஏற்பட்டுள்ள மனச்சோர்வு.

உலகம் அழகாகத் தெரிய நாம் என்ன செய்ய வேண்டும்?

மனச்சோர்வு ஏற்படும் போது போனை ஆன் செய்வது உங்கள் மனதை இன்னும் பலவீனமாக்கும். 

எடுத்துக்காட்டாக மற்றவர்கள் இன்ப சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு காணொளியை பார்ப்பதினால் நம் மனம் நாம் இவ்வளவு சந்தோஷமாக இல்லையே என்று நமக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.

ஏதோ ஒரு ஊரில் ஒரு பணக்காரன் செய்யும் தவறை ஒரு காணொளி மூலம் பார்ப்பதினால்  நம் மனதில் பணக்காரன் என்றால் இப்படிதான் இருப்பார்கள் என்று மனம் நம்பி விடும். 

இதனால் "கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறும் பணக்காரர்களையும் கேவலமாகத்தான் பார்ப்போம்".

உழைத்தால் முன்னேற முடியாது, தவறு செய்தால் தான் முன்னேற முடியும் என்று மனம் நம்பி விடும். இதனால் உழைப்பின் மீது ஈடுபாடு குறையும்.

இந்த நச்சுச் சூழலில் இருந்து தப்பிக்க சுயகட்டுப்பாடு (Digital Discipline) மட்டுமே ஒரே வழி.

தேவையில்லாத அரசியல் வன்மத்தைப் பரப்புபவர்களையும், நாகரிகமற்ற பதிவுகளை இடுபவர்களையும் உடனடியாக உங்களது கணக்கில் இருந்து Unfollow அல்லது Block செய்யுங்கள்.

ஆன்மீகம் மற்றும் மனம் சார்ந்த பதிவுகள்:உங்களுக்குப் பயனுள்ள அறிவு சார்ந்த விஷயங்கள், ஆன்மீகம், சுய முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பக்கங்களை மட்டுமே பின்தொடருங்கள்.

திரையைத் தாண்டிய நிஜ உலகம்: வாரத்தில் ஒரு நாளாவது சமூக ஊடகங்களில் இருந்து முழுமையாக விலகி (Digital Detox), இயற்கையையும், சுற்றியுள்ள நல்ல மனிதர்களையும் உற்று நோக்குங்கள்.

இந்த நச்சுத்தன்மைகளை நம் திரையில் இருந்தும், நம் மனதில் இருந்தும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... நிச்சயமாக இந்த உலகம் நமக்கு மிக அழகாக, அமைதியாகத் தெரியும்!

"மனுஷனுக்கு மனம் தான் எல்லாம், மனதை கட்டுப்படுத்தினால் நம் வாழ்வு என்றும் சொர்க்கமாகும்."

டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகி, போனுக்குள் நம் நிம்மதியான தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் தொலைத்துவிடக் கூடாது என்ற தெளிவோடு பயணிப்போம். சோர்வை சரியாகப் புரிந்துகொண்டு, உடலுக்கும் மனதிற்கும் தகுந்த ஓய்வைக் கொடுப்போம்!

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.