கோவில் திருவிழா எனும் போ@தைக் கொண்டாட்ட திருவிழா.
போ@தை எனும் சாபமும் தொலைந்துபோன கற்காலச் சந்தோஷமும்; இன்றைய திருவிழாக்களின் கசப்பான எதார்த்தம்.
திருவிழா என்ற சொல்லே ஒரு காலத்தில் கிராமங்களின் ஆன்மாவாக, மனிதர்களை இணைக்கும் உன்னதப் பாலமாக இருந்தது. சாதி, மத பேதங்களைக் கடந்து, 'ஊரே ஒரு குடும்பம்' என்ற உன்னதப் பிணைப்பை உருவாக்கியவை நம் பாரம்பரியத் திருவிழாக்கள். ஆனால் இன்று, அந்தத் திருவிழாக்களின் அசல் நோக்கம் முற்றிலும் சிதைந்து, ஒருவித பயமும் வ@ன்முறையும் நிறைந்த கூடாரங்களாக மாறி வருவதைக் காணும்போது நெஞ்சம் கணக்கிறது.
நவீன வாழ்வியல் நம்மிடமிருந்து எதையெல்லாம் பறித்திருக்கிறது என்பதை விட, எவற்றையெல்லாம் வக்கிரமாக மாற்றியிருக்கிறது என்பதைச் சிந்திப்பதே இந்த ஆதங்கத்தின் மையப்புள்ளி.
திரைக்குள் சுருங்கிய பந்தங்களும், பணத்தின் ஆடம்பரப் போட்டியும்:
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதனை உலகத்தோடு இணைத்திருக்கலாம், ஆனால் பக்கத்தில் இருக்கும் சக மனிதனிடமிருந்து அவனைத் தனிமைப்படுத்திவிட்டது. திருவிழாக்களின் அசல் மகிழ்ச்சி என்பது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து, பேசி, தழுவி, தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வதில் தான் இருந்தது. ஆனால் இன்று எல்லாமே கைபேசித் திரைகளுக்குள் (Smartphones) அடங்கிவிட்டது.
நிகழ்காலத்தில் வாழ மறுக்கும் இன்றைய மனிதன், திருவிழாவின் கொண்டாட்டங்களை மனதால் ரசிப்பதை விட்டுவிட்டு, அதைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி 'லைக்ஸ்' வாங்குவதிலேயே குறியாக இருக்கிறான்.
இதோடு சேர்ந்து கொண்ட பணத் தேடலும், சொத்துச் சேர்க்கும் ஆசையும் மனிதர்களிடையே இருந்த 'கொடுத்து வாழும்' நற்பண்பை அழித்துவிட்டது. திருவிழாக்கள் இன்று பக்திக்கும் பண்பாட்டிற்குமான அடையாளமாக இல்லாமல், 'யார் அதிக பொருளுதவி செய்கிறார்கள்?' என்ற போலிப் பெருமிதத்தையும், வர்க்க வேறுபாட்டையும் காட்டும் ஆடம்பரப் போட்டியாக மாறிவிட்டன.
மாரியம்மன் திருவிழாவா? போ@தை கொண்டாட்ட திருவிழாவா?
இன்றைய சூழலில் கிராமங்களின் காவல் தெய்வமான, நமக்கு மழையையும் ஆரோக்கியத்தையும் தரும் அன்னையான மாரியம்மனின் வழிபாட்டுப் புனிதம் எந்த அளவுக்குச் சீரழிந்திருக்கிறது என்பதைப் பார்ப்பது பெரும் வேதனையளிக்கிறது. "மாரியம்மன் கோவில் திருவிழா" என்று அழைக்காமல், "போ@தை கொண்டாட்ட திருவிழா" என்று மாற்றும் அளவுக்கு இன்றைய நிலைமை மிக மோசமாகச் சென்றுவிட்டது.
அம்மன் கரகம் வீதி உலா வரும்போது, அதன் பின்னால் பக்திப் பாடல்களுக்குப் பதில், காதைக் கிழிக்கும் சினிமா குத்துப்பாடல்களும், அதற்குப் போ@தையில் ஆடை குலைந்து, நிதானமின்றி ஆடும் இளைஞர்களின் அநாகரிக ஆட்டமுமே இன்று பிரதானமாகிவிட்டது.
அம்மனுக்கு உகந்த கூழும், துள்ளுமாவும், பானகமும் வழங்கப்பட வேண்டிய திருவிழா நாட்களில், இன்று பல தெருக்களின் மூலைகளில் ம@துபாட்டில்களே பிரசாதம் போலப் புழங்குகின்றன.
மாரியம்மன் என்ற பெண் தெய்வத்தைக் கும்பிடும் திருவிழாவில், அதே ஊர்ப் பெண்கள் போ@தை ஆசாமிகளின் தொல்லைக்கு அஞ்சி, மாலை நேரத்திற்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர பயப்படும் அவலநிலை நீடிக்கிறது.
திருவிழாக்களை உலுக்கும் மாபெரும் சாபம்; ம@து அரக்கனின் ஆட்டம்.
நாம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தையும், பணத்தையும் காரணங்களாக அடுக்கினாலும், இன்றைய திருவிழாக்களின் புனிதத்தையும், அமைதியையும் வேரோடு பிடுங்கி எறியும் மிக முக்கியக் காரணி ம@துப்பழக்கம் (குடிபோ@தை) தான். இன்று பல ஊர்களில் 'திருவிழா' என்றாலே அது 'கு@டிப்பதற்கான அங்கீகாரம்' என்ற தவறான, ஆபத்தான கலாசாரம் இளைஞர்களிடையே ஆழமாகப் பரவிவிட்டது.
ம@து மனிதனின் நிதானத்தை இழக்கச் செய்கிறது. அன்றாட வாழ்வில் சாதாரணமாகக் கடந்து போக வேண்டிய சின்னச் சின்ன ஈகோக்கள், போ@தையின் உச்சத்தில் பெரிய வ@ன்முறையாக வெடிக்கின்றன. பழைய பகைகளும், சமூகப் பிரிவினைகளும் இந்த ம@துவினால் தூண்டப்பட்டு, அ@டிதடி, வெ@ட்டுக்குத்@து எனத் திருவிழாக் களத்தையே போர்க்களமாக மாற்றுகின்றன. உண்மையில் திருவிழா என்பது பழைய எண்ணங்களை மறந்து சந்தோஷமாக வாழத்தான் என்பதை அறியாமல் ச@ண்டையிடுகின்றனர்.
தொலைந்துபோன 'கற்காலச் சந்தோஷம்'.
எந்தவொரு கவலையும், பயமும் இன்றி நள்ளிரவிலும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கொண்டாடிய பழைய திருவிழாக்கள் இன்று மெல்ல மறைந்து வருகின்றன. இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் வீழ்ச்சி அல்லவா?
கற்காலத்தில் மனிதனிடம் பணம் என்ற நாணயமோ, சொத்து என்ற சுயநலமோ, ம@து என்ற போ@தையோ இருக்கவில்லை. அன்று கிடைத்த உணவை ஊரோடு பகிர்ந்துண்டு, பாதுகாப்பாக வாழ்ந்தான் மனிதன். அந்த 'கற்காலச் சந்தோஷமும்', தூய்மையான மனிதப் பிணைப்பும் இன்றைய திருவிழாக்களில் நமக்குக் கிடைக்காமல் போனதற்கு மனிதனின் சுயக்கட்டுப்பாடற்ற போ@தை மோகமே முதன்மைக் காரணம்.
மாற்றம் என்பது வெளியில் இருந்து வருவதல்ல; நமக்குள் இருந்து வர வேண்டும். "எங்கள் ஊர்த் திருவிழாவில் வ@ன்முறைக்கும் ம@துவுக்கும் இடமில்லை" என்று உள்ளூர் இளைஞர்களும், ஊர்ப் பெரியவர்களும் ஒன்றிணைந்து எப்போது கடுமையான சுயக்கட்டுப்பாடுகளை விதிக்கிறார்களோ, அப்போதுதான் திருவிழாக்களின் அசல் நோக்கம் மீட்டெடுக்கப்படும்.
போ@தை எனும் சாபத்தை ஒழித்து, மனித நேயத்தை முன்னிறுத்தினால் மட்டுமே, தொலைந்து போன அந்த நிஜமான மகிழ்ச்சியையும் பாதுகாப்பான பிணைப்பையும் நம் தலைமுறை மீண்டும் அனுபவிக்க முடியும்.
நாம் எப்படி படிப்படியாக மனம் மாறினோம் என்பதை (பாகம் -2 ல்) பார்க்கலாம்.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧


Comments
Post a Comment