கோபம் எனும் வாழ்க்கை எதிரி.
மற்றவர்கள் மீது நாம் கொள்ளும் கோபம், நம்மையே அறியாமல் நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு பெரிய சுவராக மாறிவிடுகிறது. இதை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இதோ:
கவனம் சிதறல்:
நமது ஆற்றலும் சிந்தனையும் நமது இலக்குகளை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, யாரை நமக்கு பிடிக்கவில்லையோ அவர்களைப் பற்றி சிந்திப்பதில் நாட்கள் வீணாகிவிடுகிறது.
தவறான முடிவுகள்:
கோபத்தில் இருக்கும்போது நமது மூளை நிதானமாகச் செயல்படாது. இதனால் வாழ்க்கையின் முக்கியக் கட்டங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போக வாய்ப்புகள் அதிகம்.
வாய்ப்புகளை இழத்தல்:
கோபம் நம் கண்களை மறைப்பதால், நம்மைத் தேடி வரும் நல்ல வாய்ப்புகளோ அல்லது நம்மைச் சுற்றியிருக்கும் முன்னேற்றப் பாதைகளோ நமக்குத் தெரிவதில்லை.
இதிலிருந்து மீண்டு முன்னேற என்ன செய்யலாம்?
மன்னித்தல் மற்றும் கடந்து போதல்:
மற்றவர்கள் செய்த தவறை அவர்களுக்காக இல்லாவிட்டாலும், உங்கள் மன அமைதிக்காகவும் உங்கள் எதிர்காலத்திற்காகவும் மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்.
நேர்மறை ஆற்றல்:
கோபம் நம் உடலிலும் மனதிலும் இருக்கும் ஆற்றலை உறிஞ்சிவிடும். கோபத்தைக் கைவிடும்பொது, அந்த ஆற்றல் முழுவதும் நமது உழைப்பாகவும், வெற்றியாகவும் மாறுகிறது.
சுய முன்னேற்றத்தில் கவனம்:உங்களது ஆற்றலை அடுத்தவர்களைப் பழிவாங்குவதில் காட்டாமல், உங்களை எப்படி அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது என்பதில் காட்டுங்கள். உங்கள் வெற்றியே அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் சிறந்த பதிலாக இருக்கும்.
நாம் நன்கு அறிந்த வெற்றியாளர்கள் நிறைய பேர் கோபத்தை கட்டுப்படுத்தி சூழ்நிலைக்கு தகுந்தவாறு முடிவு எடுத்ததால் தான், இன்றைக்கும் அவர்கள் பெயரை அனைவரும் உச்சரிக்கின்றோம் எடுத்துக்காட்டாக M.S Dhoni, Ex.Indian Cricket Team Captain.
கோபத்தினால் ஒன்று, இரண்டு வெற்றிகளை பெறலாம் ஆனால் தலைமை பதவி நிதானத்திற்கே கிடைக்கும்.
🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧


Comments
Post a Comment