கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா

தலைப்பை பார்த்ததும் இதற்கான விடையை தெரிந்து கொள்ளலாம் என்று வந்திருப்பீர்கள். ஆனால் இதற்கான விடையை நீங்கள் தான் தரப்போகிறீர்கள்.

வாருங்கள்,விடையைத் தேடுவோம்.

நான் கணிதத்தில் Hence,Proved பற்றி ஒன்றை படித்திருக்கிறேன். அப்படியென்றால் ஒன்றை அனுமானமாக வைத்துக்கொண்டு இருக்கிறதா? இல்லையா? என்று முடிவுக்கு வருவது.


கடவுள் இல்லை என்று நம்பினால் அல்லது அனுமானமாக வைத்துக்கொண்டால், சுய கட்டுப்பாடும் சுய சிந்தனையும் உள்ளவர்களால் இந்த சமூகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அது இல்லாதவர்களால் என்னாகும்? நான் தான் எல்லாம் என்ற ஆணவம் மேலோங்கும், ஆசைகள் கட்டுப்பாடின்றி பெருகும், குற்றம் அதிகரிக்கும், சண்டைகள் பெருகும். இந்த பூமி நரகமாகும்.கடவுள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா என்று நினைப்பார்கள், அப்போது கடவுள் இல்லை என்பது உறுதியாகிவிடும்.


கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் அல்லது அனுமானித்துக்கொண்டால் ,கடவுள்  தண்டிப்பார் என்ற பயத்திலும், புண்ணியம் சேர்க்கும் ஆசையிலும் நன்மை செய்வார்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்ய நினைப்பார்கள். இந்த பூமி சொர்க்கமாகும்.கடவுளை வணங்கியதால் தான் இது நடந்தது என்று  நினைப்பார்கள்,அப்போது கடவுள் இருக்கிறார் என்பது  உறுதியாகிவிடும்.

ஆதலால்,

பூமி நரகமாக வேண்டுமென்றால் நம்ப வேண்டியது - கடவுள் இல்லை என்று.

பூமி சொர்க்கமாக வேண்டுமென்றால் நம்ப வேண்டியது - கடவுள் இருக்கிறார் என்று.

பாஸ்கலின் வாதம்: 17ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் பாஸ்கல் இதே விதியைத்தான் சொன்னார். "கடவுள் இருக்கிறார் என்று பந்தயம் கட்டுங்கள். அவர் இருந்தால் உங்களுக்கு எல்லையற்ற லாபம் (சொர்க்கம்). ஒருவேளை அவர் இல்லையென்றாலும் உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை (ஏனெனில் நீங்கள் நல்ல மனிதராக வாழ்ந்திருப்பீர்கள்). ஆனால் கடவுள் இல்லை என்று பந்தயம் கட்டி, ஒருவேளை அவர் இருந்தால் உங்கள் நிலை என்ன?"

"இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் (Hence, Proved), கடவுள் என்ற சக்தி வெளியில் எங்கோ உருவமாக இருக்கிறாரா இல்லையா என்பதை விட, அவர் நம் மனதில் 'சுயக்கட்டுப்பாடாகவும்', 'மனிதநேயமாகவும்' இருக்கிறாரா என்பதே முக்கியம். சக மனிதனுக்குத் தீங்கு செய்யாத குணமும், பிறருக்கு உதவும் நல்மனமும் கொண்ட ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் வாழ்கிறார். அந்த நற்செயல்களில்தான் இந்த பூமி சொர்க்கமாக மாறுகிறது!"

"கடவுள் என்பது ஆகாயத்தில் இருக்கும் ஒரு உருவம் அல்ல; அது மனிதன் மிருகமாக மாறிவிடாமல் தடுத்து நிறுத்தும் ஒரு தார்மீகக் கயிறு! அந்த கயிறு அன்பென்ற பெயரிலோ அல்லது பயமென்ற பெயரிலோ மனித மனதை நல்வழியில் கட்டுப்படுத்தினால்... 'Hence Proved', கடவுள் என் மனதில் இருக்கிறார்.

உங்கள் மனதில்,கடவுள் இருக்கிறாரா...? இல்லையா...?



எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Post a Comment

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.