குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் கடவுளா? அல்லது மனிதனின் அறியாமையா பாகம் 2 - அறிவியல் மற்றும் ஆன்மீக பார்வை.

வாரிசுகளின் ஆரோக்கியம்: 24.9% ரகசியம்!

குலதெய்வம் ஏன்


நம்முடைய முந்தைய பதிவில், ஒரு குழந்தை பிறவிக் குறைபாட்டுடன் பிறப்பதற்கு மூடநம்பிக்கைகளோ அல்லது கடவுளோ காரணமல்ல; பெற்றோரின் தவறான பழக்கவழக்கங்களால் சிதையும் DNA-வும், சுற்றுச்சூழல் நச்சுகளும்தான் முதன்மைக் காரணம் என்பதைப் பார்த்தோம். அங்கே 75 சதவீத ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.

மீதமுள்ள 24.9 சதவீத ஆரோக்கிய வாய்ப்புகள் எதில் அடங்கியிருக்கின்றன? அதைத்தான் இந்தத் தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

கடைசி  0.1 சதவீத வாய்ப்பு பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

மேலைநாடுகளின் அறியாமையும்... தமிழ்நாட்டின் அறிவியலும்!

இன்றைய உலகமயமாக்கலில், மேலைநாடுகளில் (வெளிநாடுகளில்) விந்து தானம் (Sperm Donation) அல்லது தத்தெடுப்பு போன்ற தங்களுக்குள் இருக்கும் இரத்த உறவு (அண்ணன்-தங்கை அல்லது ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள்) என்று தெரியாமலேயே பழகி, பின்னாளில் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன.

அறிவியல் பூர்வமாக, இரத்த உறவு என்று தெரியாமல் அண்ணன்-தங்கை திருமணம் செய்யும்போது, இருவரிடமும் இருக்கும் ஒரே விதமான பழுதான மறைமுக மரபணுக்கள் (Recessive Genes) ஒன்றாக இணைந்து, பிறக்கும் குழந்தைக்குக் கடுமையான உடல், மன குறைபாடு அல்லது மரபணு நோய்களை உருவாக்குவதற்கான ஆபத்து 40% முதல் 50% வரை மிகத் தீவிரமாக உயர்கிறது என்று உலகளாவிய மருத்துவப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.

இதைத்தான் மேலைநாடுகள் இன்று "மரபணுப் பரிசோதனை" (Genetic Testing) என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்து தடுத்து வருகின்றன.

ஆனால், நம் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இதற்கு மிக எளிய, அதே சமயம் அசாத்தியமான ஒரு அறிவியல் விதியை நம் முன்னோர்கள் வகுத்துவிட்டார்கள். அதுதான்: "ஒரே குலதெய்வத்தை வழிபடுபவர்கள் திருமணம் செய்யக் கூடாது!"

ஒரே குலதெய்வம் என்பது 'பங்காளி' உறவு!

அறிவியல் பூர்வமாக மனிதர்களில் ஆண் குழந்தையை உருவாக்குவது Y-குரோமோசோம் (Y-Chromosome) ஆகும். இந்த Y-குரோமோசோம் தந்தையிடமிருந்து மகனுக்கும், அவரிடமிருந்து அவரது பேரனுக்கும் எனப் பல தலைமுறைகளாக எந்தவித மாற்றமும் அடையாமல் அப்படியே கடத்தப்படுகிறது.

நம் தமிழ்நாட்டின் மரபுப்படி, குலதெய்வ வழிபாடு என்பது தந்தையின் வழிப் பரம்பரையாக மட்டுமே கடத்தப்படும். இதன் பொருள், ஒரே குலதெய்வத்தை வழிபடக்கூடிய இரு வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களின் உடலிலும் ஒரே மாதிரியான Y-குரோமோசோம் மரபணுக்கள் இருக்கும். அவர்கள் தங்களுக்குள் அண்ணன்-தம்பி (பங்காளி) முறையாவார்கள்!

ஒரே குலதெய்வத்தைக் கும்பிடும் குடும்பங்களில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரே பாட்டனின் மரபணுக்கள் இருக்கும். இவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்யும்போது, ஒரே மரபணுக்கள் ஒன்றாக இணைந்து பிறவிக் குறைபாடுகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதை உணர்ந்துதான், நம் முன்னோர்கள் வேறு குலதெய்வத்தைக் கும்பிடும் (அதாவது முற்றிலும் வேறுபட்ட மரபணுப் பின்னணி கொண்ட) குடும்பங்களில் சம்பந்தம் பேசச் சொன்னார்கள். இதன் மூலம் புதிய மற்றும் ஆரோக்கியமான மரபணுக்கள் குடும்பத்திற்குள் நுழைந்து, முந்தைய தலைமுறையில் இருந்த மரபணுப் பிழைகளைத்தானாகவே பழுதுபார்த்துவிடுகின்றன!

மனித மனதின் உன்னதம்!

மேலைநாடுகள் இன்று 'DNA மேப்பிங்' மூலம் எதைத் தேடுகிறார்களோ, அதை நம் முன்னோர்கள் 'குலதெய்வ வழிபாட்டின்' மூலம் அன்றே கண்டறிந்து தடுத்தனர். இந்த அறிவியல் எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, தம்பதியர் இருவரும்  திட்டமிடுவது தான்‌ கடமை.

ஏனெனில், இயற்கையின் விதிகளில் இருந்து மனிதன் மாறுபடும் இடம் அவனது 'மனம்' தான். காட்டில் வாழும் பறவைகளும் இது போல் உறவுமுறை தெரியாமல் தவறு செய்து, பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கும் தன் குஞ்சுகளை இயற்கையின் விதிப்படி அப்படியே கைவிட்டுவிடுகிறது. ஆனால், மனிதன் தன் பாசப்பிணைப்பால், அந்த வாரிசு குறைபாட்டுடன் பிறந்தாலும் கண்ணும் கருத்துமாக அணைத்துக் காக்கிறான்; அவனது 'மனம்' அதைக் கைவிடுவதில்லை!

அப்படிப்பட்ட உன்னதமான மனித மனதைக் கொண்ட நாம், பிறக்கும் முன்பே நம் வாரிசுகளின் ஆரோக்கியத்தை இத்தகைய அறிவியல் விழிப்புணர்வோடு காப்பதுதானே ஆகச்சிறந்த தர்மம்?

எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.