சிந்தனை செய் மனமே, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழி.

 

வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி.
முதல் வெற்றி பிறப்பு: பயத்தை வென்று வாழ்வில் ஜெயிக்க வழிகள்!

இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தினமும் ஏதோ ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு தான் இருக்கிறான். 

கல்வி, வேலை, தொழில், குடும்பம் என ஏதோ ஒரு துறையில் வெற்றி பெற நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? உங்கள் வாழ்க்கையின் முதல் வெற்றி எது என்று? நீங்கள் இந்த பூமிக்கு வந்ததே ஒரு மாபெரும் வெற்றிக் கதை தான்!


கோடிக்கணக்கான போட்டிகளைத் தாண்டிய மாபெரும் வெற்றி.
அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், இந்த உலகத்தைப் பார்ப்பதற்கு முன்பே நாம் ஒரு மிகப்பெரிய போட்டியில் வென்றிருக்கிறோம். 

கோடிக்கணக்கான உயிரணுக்களின் (Sperm cells) தீவிரமான போட்டியைத் தாண்டி, அதில் முதலாவதாக ஜெயித்து உருவானது தான் நமது உயிர். 

இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பே நாம் ஒரு போராட்ட குணம் கொண்ட வெற்றியாளராகத்தான் இருந்திருக்கிறோம். ஆனால், தாயின் கருவரையை விட்டு பூமிக்கு வந்த பிறகு, அந்த வேகம் எங்கே போனது?

குழந்தை பருவத்தில் கிடைக்கும் உற்சாகம்:

நாம் குழந்தையாக இருந்தபோது, நம் பெற்றோர் நமக்கு எத்தனையோ விஷயங்களை ஆசையோடு கற்றுக் கொடுத்தார்கள்.

 நாம் தத்தித் தத்தி முதல் அடி எடுத்து வைக்கும்போது கீழே விழுந்தால், "பரவாயில்லைடா தங்கம், எழுந்து நட" என்று கைகளைப் பிடித்து உற்சாகப்படுத்தினார்கள். 

நாம் மழலை மொழியில் தவறாகப் பேசினாலும், அதை ரசித்து மீண்டும் மீண்டும் பேசப் பழகினார்கள். ஏனெனில், அப்போது நம்மைப் புற உலகிற்குத் தயார்படுத்துவது மட்டும்தான் அவர்களின் நோக்கமாக இருந்தது.

வளர்ந்த பிறகு கைவிடப்படும் மன உறுதிப் பயிற்சி:

ஆனால், அதே குழந்தை வளர்ந்து பள்ளி, கல்லூரி என அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும்போது ஒரு பெரிய உளவியல் இடைவெளி (Psychological Gap) ஏற்படுகிறது.

ஏன் வளர்ந்த பிறகு எதார்த்த வாழ்க்கைப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது, மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை?

அவர்களுக்கே அது தெரிவதில்லை, இதுதான் கசப்பான உண்மை.
நேர்மறை எண்ணங்கள் எப்படி வாழ்க்கையை முன்னேற்றும், எதிர்மறை எண்ணங்கள் எப்படி வாழ்க்கையை முடக்கும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் மன அழுத்தம் (Stress), பயம், மற்றும் ஓவர்திங்கிங் (Overthinking) போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். 

தங்களுக்குள் இருக்கும் பயத்தை எப்படி வெல்வது என்று அவர்களுக்குத் தெரியாததால், அதைத் தங்களது பிள்ளைகளுக்கும் கடத்த முடிவதில்லை.

மதிப்பெண்களுக்குத் தரும் முக்கியத்துவம்: 

நமது சமூகம் மதிப்பெண்களையும், பணத்தையும் மட்டுமே வெற்றியின் அடையாளமாகப் பார்க்கிறது. இதனால், தோல்விகளையும் அவமானங்களையும் ஒரு மனிதன் தன் மனதில் எப்படித் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற மன உறுதிப் பயிற்சியை (Resilience) யாருமே கற்றுத் தருவதில்லை.


நம்மை முடக்கும் மூன்று முக்கிய பயங்கள்
பெற்றோர்களும் சமூகமும் நமக்கு மனக் கட்டுப்பாட்டைக் கற்றுக் கொடுக்காததால், வளர வளர நம் மனதில் சில பயங்கள் குடியேறி விடுகின்றன:

தோல்வி பயம் (Fear of Failure): "ஒருவேளை நான் செய்யும் காரியம் தோற்றுவிட்டால் என்ன செய்வது?" என்ற பயத்திலேயே பலர் புதிய முயற்சிகளை எடுப்பதே இல்லை.
 
அவமானத்திற்கு அஞ்சுதல்: ஏதாவது தவறு நடந்துவிட்டால் மற்றவர்கள் நம்மை அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற தயக்கம்.
 
'ஊர் என்ன சொல்லும்' என்ற கவலை: நமது சமூகத்தில் பலருடைய திறமைகளை முடக்குவது "நாலு பேர் என்ன பேசுவார்கள்" என்ற எண்ணம் தான்.

போராட்ட குணத்தை மீண்டும் மீட்டெடுப்பது எப்படி?

பெற்றோர் சொல்லித் தராவிட்டாலும், நமக்குள் இருக்கும் அந்தப் போராட்ட குணத்தை நாமாகத்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்:

சுய விழிப்புணர்வு (Self-Awareness): நம் மனம் எப்படி வேலை செய்கிறது, எந்த இடத்தில் பயப்படுகிறது என்பதை நாமே உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்க வேண்டும்.

தோல்விகளைப் பாடமாகக் கருதுங்கள்: தோல்வி என்பது முடிவல்ல, அது நாம் இலக்கை அடைய வேண்டிய சரியான பாதையைக் காட்டும் ஒரு பாடம். 

எதிர்பார்ப்பு: செய்கின்ற வேலையில் உடனடியாக வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்க கூடாது. ஏனெனில் வெற்றி தள்ளிப் போனால் மனம் முயற்ச்சியை கைவிட்டு விடும்.

மனக் கட்டுப்பாடு (Mind Control): தியானம், நல்ல புத்தகங்களை வாசிப்பது போன்றவற்றின் மூலம் நம் மனதை நம் வசப்படுத்தப் பழக வேண்டும்.


மனம் தான் எல்லாம்! நீங்கள் பயத்திற்கு இடம் கொடுத்தால் வாழ்வு முடங்கிவிடும்; அதுவே உங்களது பிறப்பின் வேகத்தையும், போராட்ட குணத்தையும் நினைத்துப் பார்த்தால் வாழ்வு சொர்க்கமாகும். 

ஒரு தோல்விக்கோ, அவமானத்திற்கு பயந்தோ உங்களது உன்னதமான முயற்சிகளை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். ஏனெனில், நீங்கள் பிறப்பிலேயே ஒரு வெற்றியாளர் என்பதை நினைவில் வையுங்கள்!


வெற்றி பெறும் எளிய வழி


எனது சிந்தனைப் பதிவு பிடித்திருந்தால் 👇

பகிர் சேனலில் இணைய

🌱 எனது சிந்தனை எனும் மரத்திற்கு
உங்களது கருத்துக்கள் எனும் நீரை ஊற்றுங்கள் 💧

உங்கள் கருத்தை இங்கே எழுதவும்...பதிவிடு

Comments

Popular posts from this blog

நல்ல நேரம் எனும் உளவியல்.

ஆமை புகுந்த வீடு விளங்காது ஏன்?

கடவுளை உணரும் வழி.